top of page
Writer's picturepuduvaieteacher

சாஞ்ச நெல்லு கவிதை பாடும் வாடா...இயற்கை எங்க சாமி | SAVE NATURE THEME SONG

இயற்கை எங்க சாமி | SAVE NATURE THEME SONG

LYRICS - SURESH BALAKRISHNAN

தந்தானே தானே... தந்தன் னானே னானே...

சாஞ்ச நெல்லு கவிதை பாடும் வாடா...

தந்தானே தானே... தந்தன் னானே னானே...

வேஞ்ச முள்ளும் இயற்கைத் தாயின் சேய்டா...

வச்ச வச்ச செடி பூத்தாச்சு... நட்ட நட்ட மரம் காய்ச்சாச்சு ...

சொட்ட சொட்ட வரும் மேகத் துளியால பூமி சுத்தமாச்சு...

வித்த வித்த காட்டும் காற்றாக... சுத்த சுத்த நீர் ஊற்றாக...

கன்னக்குழி மேல பள்ளச்சரிவு போல் பருவம் கூடிப்போச்சு...

இயற்கை எங்க சாமி இன்பம் கோடி பார்த்தோம்!

வரங்கள் வழங்கும் சாமி வாரிக் கொடுக்க சேர்த்தோம் !

வாசத்தோட்ட வண்ணப்பூச்சு போல் வட்ட வட்டமிட்டு தீர்த்தோம்...

தந்தானே னானே... தந்தன் னானே னானே...

சாஞ்ச நெல்லு கவிதை பாடும் வாடா வேஞ்ச முள்ளும் இயற்கைத் தாயின் சேய்டா...

மண்ணை மண்ண கிண்டி தீர்த்தாக..

தண்ணி தண்ணி கூட நஞ்சாக...

சுத்தி சுத்தி வரும் பூமிப்பந்து நின்னா மக்க எங்க போக...

நெகிழி நெகிழி கொண்டு சேர்த்தாக...

பழகிப் பழகி பூமி பாழாக...

இயற்கைத்தலை மேல இட்ட அணு உலை இன்னும் தழும்பு மாறல...

இயற்கை நம்ம சாமி இருந்தும் வீழ்த்த பார்த்தோம் ...

ஆறறிவுப்பாவி அழிவைத்தேடி அலைந்தோம்...

எதிர்காலம் சிறப்பாக மாசு தூசு தட்டி வாடா...

ஆறறிவுக்காரா ! இயற்கையோட போரா??

தேடி ஓடி நொந்து போவ வீண்டா...

தேடி ... ஓடி ...நொந்து போவ வீண் டா...

THE SONG IS SUNG BY DEEPIKA, VII STD AND DEEPIKA,

V STD OF GOVT. HIGHER SECONDARY SCHOOL, KOODAPAKKAM, PUDUCHERRY.

96 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page