அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் தொடங்கிய புதுச்சேரி கல்வித்துறை*
*தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க 'சயின்ஸ் கார்னர்' என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது*
*அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது*
*புதுச்சேரி கல்வித் துறையில், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது*
*1 முதல் 5-ம்வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளிலேயே அறிவியல் ஆர்வமுள்ள குழந்தைகளின் திறனைவளர்ப்பது அவசியம். இவ்வகுப்புகளில் அறிவியல் ஆய்வகங்கள் வசதி இல்லை. அதற்கு மாற்றுமுயற்சியை தற்போது தொடங்கிஉள்ளனர்*
*♈♈புதிய கையேடு*
*சிறுசிறு அறிவியல் விஷயங்களை பரிசோதனை செய்யும் விதத்தில் 'சமகர சிக்சா' என்ற மத்திய அரசு திட்டத்தின்கீழ் அறிவியல் திறனை தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு கற்று தர 'சயின்ஸ் கார்னர்' என்ற புதிய கையேட்டை கல்வித்துறை உருவாக்கியுள்ளது*
*இதுதொடர்பாக 'சமகர சிக்சா' ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர் னாண்டஸ் கூறியதாவது: சமகர சிக்சா திட்டத்தின்கீழ் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த திட்டம் தயாரித்து விண்ணப்பித்தோம்*
*💎💎தலா ரூ.5 ஆயிரம்*
*ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ. 5 ஆயிரம் ஒதுக்கீடு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதி தந்துள்ளது. இதையடுத்து அறிவியல் ஆசிரியர்களை கொண்ட குழு அமைத்து 'சயின்ஸ் கார்னர்' என்ற தலைப்பில் கையேடு உருவாக்கியுள்ளோம்*
*இந்த கையேடு மூலம் அறிவியல் கோட்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்களை சிறு, சிறு பரிசோதனைகள் மூலம் குழந்தைகளே அறிய முடியும். அறிவியல் பரிசோதனைகளுக்கு தேவையான பொருட்கள், அதன் பயன் என அனைத்து விவரங்களும் கையேட்டில் இருக்கும்*
*கையேட்டினை பயன்படுத்தி செயல்முறை விளக்கங்களை செய்வதற்காக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக யூடியூப் சேனலை உருவாக்கியுள்ளோம். தற்போது மாதிரி வீடியோக்களை பதிவிட தொடங்கியுள்ளோம்*
*இவ்வாறு அவர் கூறினார்*
*புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ருத்ர கவுடு கூறும்போது, ''நடப்பாண்டு புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 'சயின்ஸ் கார்னர்' திட்டப்படி 5-ம் வகுப்புமாணவர்களுக்கான அறிவியல்திட்டங்களை உருவாக்கியுள்ளோம். கையேடும் தயாரித்துள்ளோம்*
*🌐🌐சிறு சிறு பரிசோதனைகள்*
*சிறு, சிறு அறிவியல் பரிசோதனைகளை அவர்களே செய்து முழுமையாக கற்கலாம்*
*இதற்கான யூடியூப் சேனலுக்கு தேவையான வீடியோக்கள் தயாரித்து வருகிறோம். முதற்கட்டமாக ஆசிரியர்களை கொண்டு பத்து வீடியோக்கள் தயாராகியுள்ளன*
*விரைவில் அனைத்தையும் பார்க்கலாம். குழந்தைகள் அறிந்துகொள்ளும் அறிவியல் சார்ந்த விஷயங்களின் வீடியோக்களும் இதில் இடம்பெறும்'' என்று குறிப்பிட்டார்*
♦♦♦♦♦♦♦♦♦♦
Comments